கொமாண்டோ படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாஅதிரடி நீக்கம்?

183

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா,சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அண்மையில் மீரிஹானவில் இலக்கத்தகடு மாற்றப்பட்ட வெள்ளை வான் ஒன்றில், கைது செய்யப்பட்ட மூன்று சிறிலங்கா படையினரிடம் இருந்த கைத்துப்பாக்கி, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ துப்பாக்கி என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டதையடுத்தே, அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

z_sec350-300x225

அதிகாரபூர்வமாக இராணுவ அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை, இராணுவச் சட்டங்களின் படி, இன்னொருவர் கொண்டு செல்லக் கூடாது.

அந்த அடிப்படையிலேயே, கொமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவை சிறிலங்கா இராணுவத் தளபதி நீக்கியுள்ளார்.

SHARE