கொம்பனை நான் தடுத்தேனா? உதயநிதி மறுப்பு

340

மெட்ராஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி, லட்சுமி மேனனுடன் இணைந்து நடித்த படம் கொம்பன்.

இப்படத்தில் சாதி கலவரத்தை தூண்டும்படியான காட்சிகள் இருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பிரச்சனை செய்தார்.நண்பேண்டா படத்துக்கு திரையரங்கு கிடைக்காததால் உதயநிதி தான் இந்த பிரச்சனையை தூண்டியதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் இதை உதயநிதி மறுத்துள்ளார். ஒரு மாதம் முன்பே நண்பேண்டா படத்துக்கு திரையரங்கை ஒப்பந்தம் செய்துவிட்டோம்.

அதனால் கொம்பனை நினைத்து நான் பயப்பட தேவையில்லை என்றும் விளம்பரத்துக்காக இப்படி சம்பந்தப்படுத்தி பேசுகிறார்களோ என்று தோன்றுகிறது எனவும் கூறியுள்ளார்.

SHARE