கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணன்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

21

 

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணன். அம்மா கதாபாத்திரம் என்றாலே ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் இவர் தான்.

நாயகன், கருத்தம்மா, அஞ்சலி, பசுபொன் போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை மிரட்டல்
இந்நிலையில், நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாருடன் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. நடந்த இந்த தகராறில் சரண்யா பொன்வண்ணன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதன்படி தற்போது சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE