சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்தவர் நடிகை ஸ்ருதி சந்திரலேகா. வந்த இடத்தில் சினிமா பைனான்சியராக அறிமுகமான நெல்லையை சேர்ந்த ரெனால்ட் பீட்டர் பிரின்சோ என்பருடன் காதல் ஏற்பட்டது. அவருக்கு நிறைய நண்பர்கள். பணமும், நட்பு வட்டாரமும் பெருக ஸ்ருதி தவறான பாதையை தேர்ந்தெடுத்தார். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த பிரின்சோவை நண்பர்கள் மற்றும் கூலிப்படையினரை கொண்டு கொலை செய்தார். பிணத்தை ரகசியமாக புதைத்து வைத்தாலும் விஷயம் வெளியாகி கொலைக்கு காரணமான ஸ்ருதியின் நண்பர்களும், கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டார்கள்.
ஸ்ருதி மட்டும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்து வருகிறார். ஸ்ருதி தற்போது சாம்பவி என்ற படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கால்வாசி படம் முடிந்து விட்ட நிலையில் போலீசிடம் பிடிபடுவதற்கு முன்பு முழு படத்தையும் முடித்து விட தீர்மானித்து ரகசிய இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இப்போது போலீசுக்கு கிடைத்துள்ளதாம். இதனால் படப்பிடிப்புக்கு கருவிகளை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் எந்தெந்த படத்துக்கு கருவிகள் கொடுத்திருக்கிறார்கள் என்ற தீவிர விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். விரைவில் ஸ்ருதி பிடிபடுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.