கொல்கத்தா அணியை குறைவாக மதிப்பிடவில்லை: ஷான் மார்ஷ்

546

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேறுதல் சுற்று ஆட்டத்தில் (சென்னை– மும்பை) வெல்லும் அணியுடன் மோதும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இன்று கொல்கத்தாவில் நடக்கும்  ஆட்டத்தில் பஞ்சாப்– கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், ஷேவாக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஜான்சன், சந்தீப் ஷர்மா, அக்ஷர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணி லீக் ஆட்டத்தில் 11 வெற்றி பெற்று பலம் வாய்ந்ததாக உள்ளது.

கொல்கத்தா அணி கடைசி 7 ‘லீக்’ ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அந்த அணியில் கவுதம் காம்பீர், ராபின் உத்தப்பா, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். இந்த போட்டி குறித்து பஞ்சாப் அணியை சேர்ந்த ஆஸ்திரேலியா வீரர் ஷான் மார்ஷ் கூறியதாவது:–

இந்த ஆண்டு ஐ.பி.எல். பஞ்சாப் அணிக்கு அற்புதமாக இருக்கிறது. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இனி மிகப்பெரிய ஆட்டங்கள் வர இருக்கிறது. கொல்கத்தா அணி கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கொல்கத்தா அணி நல்ல பார்மில் உள்ளது. அதனை எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம். இருந்த போதிலும் எங்களது முழு திறமையை வெளிப்படுத்துவோம். எந்த அணியையும் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

SHARE