கொழும்பில் 6வது மாடியில் இருந்து விழுந்த சிறுமி

363

 

கொழும்பு – கிரான்ட்பாஸ் தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்து 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (03) இரவு 11.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முவதொர உயன என்ற புதிய மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்த சுப்ரமணியம் சுகுனியா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் கிரான்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE