கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நோக்கம் என்ன?

153

 

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிணையில் விடுதலையாகிய பசில் ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைத்துக்கொள்வதே இந்த சந்திப்பின் நோக்கம் என தகவல் வெளியாதகியுள்ளது.

சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினருக்கு எதிராக பயன்படுத்தும் நோக்கத்தில் பசில் ராஜபக்சவை இணைத்துக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தியே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின் போது இரண்டு மணித்தியாளங்கள் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் குறித்த சந்திப்பிற்கு லசந்த அலிகியவன்னவும் இணைந்துகொண்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இச்சந்திப்பின் முடிவுக்கமைய பசில் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும நாட்களில் விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் மைத்திரி தரப்பினரின் யோசனைக்கு முன்னாள் அமைச்சர் இதுவரையில் எவ்வித பதலும் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Dec082014

மகிந்த தோற்பார் என ராஜிதவிடம் கூறி பசில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தற்போது இணைந்து செயற்படும் நபர்களுடன் அவர் தேர்தலை சந்தித்தால், தோல்வியை தவிர வேறு எதுவும் மீதமிருக்காது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தன்னை சந்தித்த அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை, அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த 20 ஆம் திகதி சந்தித்து சுமார் 2 மணிநேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமை குறித்து இவர்கள் பேசியதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக பசில் ராஜபக்ச கடும் வெறுப்பில் கருத்து வெளியிட்டதாகவும் தெரியவருகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தோல்வியை தவிர்க்க முடியாத நிலைமை காணப்பட்டதாகவும் சமூகத்தில் அவரை நிராகரிக்கும் கடுமையான நிலைமை இருந்தாகவும் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக செயற்பட்டு வந்த ஊடகம் ஒன்றின் பிரதானியிடம் தான் இதனை கூறியதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவுடன் தற்போது இணைந்து செயற்படும் தரப்புடன் அவர் தேர்தலில் போட்டியிட்டால், படுதோல்வியை தவிர அவருக்கு வேறு எதுவும் மிஞ்சாது எனவும் பசில், அமைச்சர் ராஜிதவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE