கொழும்பு மகசின் சிறையில் 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் என்னும் முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார்.

282
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியான முன்னாள் போராளி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
மகசின் சிறைச்சாலைக் கைதியான 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் என்னும் முன்னாள் போராளியே சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் குளித்துக் கொண்டிருந்த நிலையில் கிணற்றடியில் வழுக்கி  விழுந்தபோதிலும், இவரின் உடல்நிலையைக் கண்டுகொள்ளாத சிறை அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னரே வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று  கொழும்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலையில் உயிரிழந்த நான்காவது அரசியற் சிறைக் கைதி இவராவார்.
சிறை அதிகாரிகளின் அசமந்த போக்கே இம்முன்னாள் போராளியின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது என ஏனைய அரசியற் கைதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சயனைட் அருந்திய நிலையில் இராணுவத்தினரிடம் பிடிபட்டு காப்பாற்றப்பட்ட இவர், மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ஏனைய அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட கைதிகளுக்கு வழங்கும் சலுகைகள், முன்னாள் போராளிகளுக்கு சிறை அதிகாரிகளால் வழங்கப்படுவதில்லையெனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
images8
SHARE