கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 52 எயிட்ஸ் நோயாளர்கள்

475
கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 52 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இவர்களில் அதிகளவானோர் ஆண்கள் எனவும் அவர்களில் 15 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் முழுவதும் நாட்டில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுத்த போதும், இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் எயிட்ஸ் நோயாளிகள் அதிகரித்துள்ளனர் எனவும் லியனகே குறிப்பிட்டுள்ளார்

 

SHARE