கொழும்பு ரோயல் கல்லூரி வென்றது

18
144 ஆவது கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டித் தொடரில் ரோயல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரி அணி 8 விக்கெட்களை இழந்து 326 ஓட்டங்கள் பெற்ற நிலையில் போட்டியை இடைநிறுத்தியிருந்தது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய தோமஸ் கல்லூரி அணி சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ரோயல் கல்லூரி அணி 4 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்கள் பெற்ற நிலையில் போட்டியை இடைநிறுத்தியிருந்தது.

பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தோமஸ் கல்லூரி அணி சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் 181 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

SHARE