கோடிக் கணக்கில் விடுதலைப் புலிகளிடம் பணத்தைக் கொடுத்து 2004 ஆம் ஆண்டு மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று செய்தார்கள். அதனால் தான் மஹிந்த வென்றார். அதில் விடுதலைப் புலிகளை நான் குற்றம் சொல்லவில்லை. இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் அதை செய்தது.

130

 

எங்களின் தலைவர் பிரபாகரன் என தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசி இனவாதத்தை தூண்டி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று மஹிந்த மீண்டும் வரக்கூடிய நிலையை கூட்டமைப்பு உருவாக்குகிறது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ஆனந்தசங்கரி குற்றம் சாட்டியுள்ளார். வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

IMG_20150718_232230

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது – இந்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் பணம் வழங்கி தேர்தலில் போட்டியிடவில்லை. மக்கள்தான் எமக்கு பணம் தந்து போட்டியிட வைக்கிறார்கள்.

இந்த தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எமக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை குழப்ப வேண்டாம். தென்னிலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்று வந்தது என்று கூறுகிறார்கள். அரசாங்கம் மாறிவிட்டது என்கிறார்கள். உண்மையில் ஆள் தான் மாறியதே தவிர அரசாங்கம் மாறவில்லை. இதனை கூட்டமைப்பு மாற்றவில்லை. தென்னிலங்கை சக்திகள் ஒன்று பட்டு மாற்றின. அபபோது தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஆதரவளித்தன. 5 இலட்சம் மக்கள் வாக்களித்த பின் தான் கூட்டமைப்பு மைத்திரியை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. ஆக இந்த மாற்றத்தை கூட்டமைப்பு கொண்டுவரவில்லை.

இப்பொழுது சில கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபாகரனே தமது தனது தலைவன் எனக் கூறுகின்றனர். இதனை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இது சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்தவுக்கான வெற்றி வாய்ப்பையே ஏற்படுத்துகிறது. மஹிந்தவை மீண்டும் வெல்ல வைப்பதற்கான வாய்ப்புக்களையே புலிகளின் பெயரைப் பயன்படுத்தி கூட்டமைப்பு செய்கிறது. நான் பிரபாகரனுக்கு எதிரானவன் இல்லை. அவர் ஒரு சிறந்த துடிப்புள்ள இளைஞன். தலைமைத்துவத்திற்கு வரக் கூடியவர்.

அவருக்கு நான் பல கடிதங்களை எழுதினேன். ஆனால் அவரை நல்ல நிலைக்கு கொண்டு வராது இவர்கள் எல்லோரும் இணைந்து அவரை அழித்துவிட்டார்கள். நான் 58 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டுள்ளேன். ஒருவர் எவ்வாறான கஷ்டங்களை அனுபவித்து வந்தார் என உங்களுக்கு தெரியாது. எவ்வாறான தொண்டை செய்து வருபவர் என்பதும் தெரியாது. என்னை துரோகியாக சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஆனால் நான் செய்த துரோகம் என்ன என்று கேட்டால் தெரியாது.

எனக்கு மந்திரி வேலை பார்த்திருக்க முடியும். அப்படியான வாய்ப்புக்கள் பல வந்தன. ஆனால் மக்களுக்காக அதை தட்டிக் கழித்தேன். வடமாகாண ஆளுநர் பதவி தருவதாகக் கூட முன்னர் மஹிந்த கேட்டிருந்தார். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் செய்த தியாகங்களை உணரவேண்டும். இன்று சிலர் பணத்தை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள்.

ஆனால் அதன் உண்மைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். நான் பதவிகளில் இருந்த காலத்தில் பதவி வழி தவறி எதுவும் செய்யவில்லை. எனக்கு தெரிந்த குற்றம் ஒன்று தான். அது விடுதலைப் புலிகள் ஏக பிரதிநிதிகள் என ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். நான் அதை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு தான் கஸ்டம் எனத் தெரிவித்திருந்தேன். அரசாங்கத்துடன் அவர்கள் தான் பேச வேண்டும் என கூறி அவர்களுக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்ற அந்தஸ்தை கொடுத்தேன். அது குற்றமா? நான் சொன்ன ஆலோசனைகளை விடுதலைப் புலிகள் அல்லது அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஏற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

கோடிக் கணக்கில் விடுதலைப் புலிகளிடம் பணத்தைக் கொடுத்து 2004 ஆம் ஆண்டு மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று செய்தார்கள். அதனால் தான் மஹிந்த வென்றார். அதில் விடுதலைப் புலிகளை நான் குற்றம் சொல்லவில்லை. இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் அதை செய்தது. உடந்தையாக இருந்து செய்யப் பண்ணியது. இன்று அவ்வாறு செய்திருக்காவிட்டால் இன்று அந்த அவலங்கள் வந்திருக்காது. விடுதலைப் புலிகள் பாடசாலைகளில் இருந்து நேரடியாக இயக்கத்திற்கு வந்தவர்கள். அவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை. ஆனால் கூட்டமைப்பில் படித்தவர்கள், அப்புக்காத்துக்கள் எல்லாம் இருந்தார்கள். அவர்கள் சொல்லி திருத்தியிருக்க வேண்டும். 2010 ஆம் ஆண்டு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்தார்கள். ஒருபுறம் இராணுவத்திற்கு எதிராக கதைத்துக் கொண்டு மறுபுறம் அவரை ஏற்றுக் கொண்டார்கள்.

இது யார் செய்தது குற்றம்? 2003 ஆண்டு சம்பந்தன் என்னிடம் சொன்னார் நானும் விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அமைதியாக இருக்கிறேன். நீங்கள் ஏன் எதிர்த்துச் சொல்கிறீர்கள் என கேட்டார். நான் பதவிக்கு ஆசைப்படாமையால் உண்மையைச் சொன்னேன். அன்று நான் விடுதலைப் புலிகள்தான் ஏக பிரதிநிதிகள், தலைமை என ஏற்றிருந்தால் இன்று கூட்டமைப்ரின் தலைவர் நானே. ஜெனீவா விவகாரத்தில் கூட என்ன நடந்தது. இந்தியா நடுநிலமை வகிக்க வேண்டும் என கேட்டேன். அது அயல்நாடு அதனை மீறி எதுவும் நடக்காது. அங்கிருந்கிற சில தமிழ் தலைவர்களுக்கு இங்குள்ள நிலமை புரியாது.

அவர்களின் இஸ்ரத்திற்கு கூட்டமைப்பும் ஜெனீவா போய் பலதைச் செய்தது. கடைசியில் நடந்தது என்ன? தென்னிலங்கையில் அன்று எதிரியாக இருந்த சந்திரிக்காவும் ரணிலும் ஒரே மேடையில் ஏறுகின்றார்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுக்குள் சம்மந்தரும் சங்கரியும் ஒற்றுமையாக முடியவில்லை. ஏன் எனில் சிலர் நினைத்தார்கள் தமிழரசுகட் கட்சியை வளர்ப்போம் என்று அதனால் என்னை புறந்தள்ளினார்கள். நான் டக்ளஸுடன் கூட நாடாளுமன்றத்தில் சண்டை பிடித்திருக்கின்றேன். இதற்கு வேண்டும் எனில் பிரபாகரனைதான் நான் சாட்சிக்கு கூப்பிட வேண்டும். ஒரு நாள் அவரை சந்திக்கும் போது மவை, சம்பந்தர் முன்னிலையில் பிரபாகரனே என்னிடம் நேரடியாக இதனைச் சொன்னார்.

SHARE