கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு

548

இந்திய விளையாட்டு மேம்பாட்டு அக்கடமி (இஸ்பா) சார்பில் 13–வது கோடை கால தடகள பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. எஸ்.டி.ஏ.டி.யுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமில் 10 வயதில் இருந்து 22 வயது வரை உள்ள 140 பேர் பங்கேற்றனர். இதன் நிறைவு விழாவில் அர்ஜூனா விருது பெற்ற கைப்பந்து பயிற்சியாளர் ஜி.இ.ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விளையாட்டு இயக்குனர் கே.வைத்தியநாதன், விளையாட்டு மருத்துவ நிபுணர் கண்ணன் புகழேந்தி, முகாமின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் சர்வதேச தடகள வீரருமான ஆர்.நடராஜன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த முகாமின் ஆர்.ஸ்.அன்திரா, செந்தில் ரத்தினம், ஆரிபா, சிரஞ்சீவி, யாஷ்வினி, அரவிந்த், அக்ஷயா, அதிபன், கீர்த்தனா, ரிச்சர்ட சார்லஸ், பூரணி, சங்மித்ரன், ஷில்பா, கிரண் ஆகியோர் சிறந்த தடகள வீரர்– வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

SHARE