முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்ஸவிற்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம் வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது.
இராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் உயிர் பலிகளுக்கும் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களுக்கும் கோதபாய ராஜபக்ஸ பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமெனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வெல இடங்களைச் சேர்ந்த மக்கள் சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரியும், கழிவுகள் நீரில் கலப்பதனை தடுக்குமாறு கோரியும் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த கோதபாய ராஜபக்ஸ இராணுவத்தினரைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிலர் கொல்லப்பட்டதுடன், சிலர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சியனே நிரைப் பாதுகாக்கும் மக்கள் அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.