சென்றவாரம் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து பலரிடம் இருந்த முக்கிய கேள்வி, முன்னாள் பாதுகாப்பு செயலரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே எங்கே என்பதுதான்.தேர்தல் முடிவு வெளியாகும் முன் மாலைதீவு பறந்தார், அமெரிக்கா, சிங்கப்பூர் சென்றார் என ஏகபட்ட செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அவர் இலங்கையில் தான் இருக்கிறார் ஆனால் வீட்டுக் காவலில் இருக்கிறார் என நம்பத்தகுந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தது.
இருந்தும் இலங்கையில் எங்கு இருக்கிறார் ? சென்ற அரசில் முக்கிய புள்ளியாக இருந்தவர் இலங்கையில் இருந்தால் திடீரென ஊடகங்களின் மறைந்து போவது எப்படி? என்ற கேள்விகளும் இருந்து வந்த நிலையில் சற்றுமுன் கொழும்பை சேர்ந்த சில ஊடகங்கள் மேலுள்ள படத்தை பிரசிரித்துள்ளன.அப்படத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள பாப்பரசரை முன்னாள் ஜனாதிபதியும், அவரின் சகோதரும் சந்திக்கும் காட்சி வெளியாகியுள்ளது.கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தில் இச்சந்திப்பு நடந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.