கோலியின் 50 சதங்கள் சாதனையை இந்த இருவர்கள் முறியடிப்பார்கள்! கம்ரான் அக்மல் வியூகம்

83

 

விராட் கோலியின் 50 சதங்கள் சாதனையை இவர்களால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.

50 சதங்கள்
உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய 50 -வது சதத்தை பதிவு செய்தார்.

இவர், சச்சினின் 49 சதங்கள் சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்
இந்நிலையில், சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தது போலவே, கோலியின் சாதனையை இவர்கள் இருவரால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

அவர் பேசும் போது, “விராட் கோலியின் சாதனையை முறியடிக்க டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் தான் முடியும். மிடில் ஆர்டர் பேட்டர்களால் முடியாது. அந்தவகையில் பார்க்கும் போது பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், இந்திய வீரர் சுப்மன் கில் ஆகிய இருவரால் மட்டுமே கோலியின் சாதனையை முறியடிக்க முடியும்” என்றார்.

SHARE