கோவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

27

 

இலங்கையில் மேலும் 5 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்களில் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 4 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்றினால் மரணமடைந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் இதுவரை பதிவாகிய மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 16,335 ஆக உயர்ந்துள்ளது.

SHARE