கோஹ்லியா இப்படி??

324

பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஐ.பி.எல்., போட்டிக்கான ‘பாஸ்’ கேட்டுள்ளார். இது போதாது என்று, டில்லியில் நடக்கும் சில போட்டிகளுக்கு வாகனம் நிறுத்தவதற்கான ‘பாஸ்’ கூடுதலாக கேட்டுள்ளார். இவரைப்போல நட்சத்திரங்கள் எல்லாம் இப்படி செய்யலாமா என கிரிக்கெட்  சங்க நிர்வாகிகள் குமுறுகின்றனராம்.

‘போலீஸ் பவுலர்’ 

சமீபத்தில் ராஜஸ்தான் வீரர்கள் ஆமதாபாத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், சில பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசினார். இவரை, அணி ஆலோசகர் டிராவிட்டிற்கு மிகவும் பிடித்துவிட்டது. எப்படி அருமையாக பந்துவீசுகிறீர்கள் என கேட்டாராம். அதற்கு,‘‘சில ஆண்டுகளுக்கு முன் குஜராத் அணி சார்பில் ரஞ்சி கோப்பையில் பங்கேற்றேன். பின் தான், காவல் துறையில் சேர்ந்தேன்,’’ என்றார்.

சம்பளம் குறைவு

பெங்களூரு அணியின் ‘ஜெர்சி’ சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் உள்ளது. இந்த நிறம் கர்நாடகா அரசின் சின்னத்திலும் இடம்பெற்றிருக்கும். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் போட்டி துவங்கும் முன், எல்லா இருக்கைகளிலும் அணியின் கொடியை வைக்கின்றனர். ரசிகர்கள் சென்ற பின், இதை துப்பரவு தொழிலாளர்கள் சேகரிப்பர். இவர்களுக்கு சம்பளமாக ரூ.400 தரப்படுகிறது. இது, போட்டிக்கான குறைந்தபட்ச ‘டிக்கெட்டின்’ விலையை விட குறைவானது.

SHARE