கோஹ்லியின் திட்டத்தால் தடுமாறும் இந்தியா: இலங்கை செல்கிறார் ஸ்டூவர்ட் பின்னி

183
இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சகலதுறை ஆட்டக்காரரான ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது. இதற்கு துடுப்பாட்டக்காரர்களின் மோசமான செயல்பாடே காரணமாக அமைந்தது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 5 பவுலர்கள் ‘பார்முலாவை’ பின்பற்றுகிறார். இந்த புதிய திட்டத்தில் துடுப்பாட்டக்காரர்கள் குறைவாக இருக்கிறார்கள்.

6, 7வது இடத்தில் சிறந்த துடுப்பாட்டக்காரர்கள் அவசியம். தற்போது 6வது இடத்துக்கு சகா உள்ளார். ஆனால், 7வது இடத்துக்கு சரியான நபர் இல்லை.

இதனால் அணியின் துடுப்பாட்ட வரிசையை வலுப்படுத்தும் நோக்கத்தில் சகலதுறை வீரரான ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி கொழும்பில் நடைபெற இருக்கும் 2வது டெஸ்டுக்கு முன் இவர் அணியில் இணைவார். இவர், ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக 2வது டெஸ்டில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

இந்தியா டெஸ்ட் தொடரை தற்காத்துக்கொள்ள 2வது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

SHARE