க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மஸ்கெலியா நல்லதண்ணீர் தமிழ் மகா வித்தியாலத்திலிருந்து 24மாணவர்கள் உயர்தர கலைப்பிரிவிற்கு தகுதி

349

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மஸ்கெலியா நல்லதண்ணீர் தமிழ் மகா வித்தியாலத்திலிருந்து தேற்றிய 51 மாணவர்களில் 24மாணவர்கள் உயர்தர கலைப்பிரிவிற்கு தகுதி பெற்றுள்ளனர் என வித்தியாலய அதிபர் இரா.மேகநாதன் தெரிவித்துள்ளார். பாடசாலை வரலாற்றில் இம்முறை கூடுதலான மாணவர்கள் உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகம் வினோதன் 5 ஏ, 2 பி, 1 சி சித்திகளையும், வீரமுத்து ஜனனி 4 ஏ, 1 பி, 3 சி சித்திகளையும், நடராஜ் ரவீந்திரன் 3 ஏ, 2 பி, 1 சி, 1 எஸ் சித்திகளையும், வீரமுத்து ஜெயந்தினி 3 ஏ, 3 பி, 1 சி சித்திகளையும்,தியாகராஜா தியாசினி 3 ஏ, 2 பி, 1 சி, 1 எஸ் சித்திகளையும் பெற்றுள்ளனர். மேலும் இம்முறை கணித பாடத்தில் 2 ஏ, 4 பி, 9 சி, 10 எஸ் சித்திகளை பெற்று 24 பேர் சித்தியடைந்துள்ளதோடு வரலாறு பாடத்தில் 5 ஏ, 3 பி, 12 சி, 21 எஸ் சித்திகளையும், சுகாதார பாடத்தில் 6 ஏ, 3 பி, 2 சி சித்திகளையும், நடன பாடத்தில் 4 ஏ, 2 பி, 1 சி சித்திகளையும், சங்கீத பாடத்தில் 1 பி, 4 சி சித்திகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடதக்கது. சிறந்த பெறுபேறுகளை பெற்று கொடுக்க உழைத்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 7ம் திகதி செவ்வாய் கிழமை பிற்பகல் 2 மணிக்கு இடப்பெறவுள்ளது எனவும் வித்தியாலய அதிபர் இரா.மேகநாதன் தெரிவித்துள்ளார்.
செ.தி.பெருமாள்

SHARE