சங்கக்காராவை புகழ்ந்து தள்ளிய விராட் கோஹ்லி

159
சங்கக்காரா எங்களுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா 20ம் திகதி கொழும்பில் நடக்கும் இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.இது தொடர்பாக பேசிய இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, “சங்கக்காரா மிகச்சிறந்த அன்பான மனிதர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவருடன் நான் பேசி பழகியிருக்கிறேன்.

சிறந்த ஆட்டநுணுக்கம் மற்றும் அவரது வழியில் உலக முழுவதும் சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்துள்ளார். அவருடைய ஓட்டங்களே அவரைப்பற்றி பேசவைக்கும்.

எங்களுக்கு எதிரான அவரது கடைசி போட்டிகள் அமைந்ததால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது எங்களுக்கு ஒரு சிறப்பான நிகழ்வு என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிற்கு எதிராக அவர் மிகச் சிறப்பான வகையில் ஓட்டங்கள் குவிக்கவில்லை. இருப்பினும் கிரிக்கெட்டிற்குப் பிறகு அவரது வாழ்க்கை சிறப்பாக அமைய நான் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

SHARE