சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் இழப்பு.. முதுகெலும்பற்ற இலங்கையை வீழ்த்துவோம்: வக்கார் யூனிஸ்

340
சங்கக்காரா, ஜெயவர்த்தனே இல்லாத நிலையில் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரை எளிதில் கைப்பற்றுவோம் என்று பாகிஸ்தான் பயற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் வருகின்ற 17ம் திகதி தொடங்குகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், நடைபெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முடியும்.

மிச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களான ஜெயவர்த்தனே, சங்கக்காரா ஆகியோரை ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இழந்துள்ளது. அவர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் எளிதில் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE