சசி வீரவன்சவும் துமிந்த சில்வாவும் விரைவில் கைதுசெய்யப்படுவர்!- பொலிஸ்

350

 

மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவும் போதைவஸ்து குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். பொலிஸ் தரப்பை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹனவின் தகவல்படி இவர்கள் இருவரும் கைது செய்யப்படவுள்ள போதும் எப்போது என்ற திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இந்த இருவர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையில் 50வீதமானவை நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில் இந்த வாரத்தில் மேலதிக நடவடிக்கைகள் குறித்து தகவல் வெளியாகும் என்று ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

SHARE