சஜித்தின் முக்கிய சகாக்களுக்கு அரசாங்கத்தில் இணையுமாறு அழைப்பு

29

 

ஐக்கிய மக்கள் சக்தியின்(SJP)நான்கு முக்கிய உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான தலதா அதுகோரல(Thalatha Atukorale), கபீர் ஹாசீம்(Kabir Hashim), முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) மற்றும் ஏரான் விக்ரமரத்ன(Eran Wickramaratne) ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நேரடி அழைப்பு
ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

மேலும், குறித்த நான்கு பேருக்கும் நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை பின்பற்றவில்லை எனவும் நாலக கொடஹேவாவின் கொள்கைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE