சட்டமுறைமைகளே சரியாக இல்லாத ஒரு நாட்டில் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது! -சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி-

424

 

சட்டமுறைமைகளே சரியாக இல்லாத ஒரு நாட்டில் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

Suresh-Premachandran-Speech-2

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் யாழ்.எவ்எம் செய்திச்சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ். நீர்வேலி பகுதுpயில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (15.09.2015) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கின்றது.

நேற்றைய தினம் ஆரம்பமாகியிருக்கும் ஐ.நா மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடர் குறித்து இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தமது கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

ஜெனிவாவில் ஆரம்பித்திருக்கின்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய தினம் இலங்கை தொடர்பில் பல கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

அதில் கடந்தகாலத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மட்டும் வைத்து இலங்கையை எடைபோட வேண்டாம் என்றும்,

அதேபோன்று பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என்பததாகவும் அனைத்துலக சமூகத்திடம் அவர் வாக்குறுதி அளித்திருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டுகின்றார்.

வெளிவிவகார அமைச்சரின் ஜெனிவா உரை குறித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்திருப்பதாவது..

ஐ.நா மனித உரிமைப்பேரவையில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருப்பது சுவையான இனிப்பு போன்ற விடையமே தவிர வேறொன்றும் இல்லை.

சர்வதேச தரத்திலான உள்ளக விசாரணை, இனப்பிரச்சினை, சட்டதிட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் ஜெனிவாவில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை தென்னாபிரிக்காவின் பாணியிலான உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என பல்வேறான உறுதி மொழிகள் அங்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

இவைகள் அணைத்துமே சுவை மிகுந்த இனிப்புப் பண்டங்களாகவே இருக்குமே தவிர வேறொன்றுமாக இல்லை.

போர்குற்றம், இனப்படுகொலை, அணைத்துலக விசாரனை, சாட்சிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட எவையும் இலங்கையில் சட்டரீதியானதாக இல்லாத நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு சூழலில் உறுதி மொழிகளைவிட காத்திரமான நடவடிக்கைகiளே தற்போதைக்கு தேவைப்படுகின்றன. அவற்றை எங்கு யாரிடமிருந்து எதிர்பார்ப்பது?

நாட்டில் சட்டமுறைமைகளே சரியாக இல்லாத ஒரு நிலையில் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE