சட்டம் ஒரு இருட்டறை என்று ஊர்வலத்தில் கத்திக்கொண்டு போகலாம். ஆனால் சட்டம் ஒரு இருட்டறை அல்ல.- பிரபல்ய சட்டத்தரணி சிற்றம்பலம்.

368

 

சட்டம் ஒரு இருட்டறை என்று ஊர்வலத்தில் கத்திக்கொண்டு போகலாம். ஆனால் சட்டம் ஒரு இருட்டறை அல்ல.- பிரபல்ய சட்டத்தரணி சிற்றம்பலம்.

சட்டம் ஒரு இருட்டறை என்று ஊர்வலத்தில் கத்திக்கொண்டு போகலாம். ஆனால் சட்டம் ஒரு இருட்டறை அல்ல.- பிரபல்ய சட்டத்தரணி சிற்றம்பலம்.http://www.thinappuyalnews.com/?p=26575

Posted by Thinappuyalnews on Friday, May 22, 2015

44444444
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பாக வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாக் கண்டிபதோடு, நீதி வழங்கப்பட வேண்டும் என்று இதுவரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ஆதாவது நீதி வழங்கக்கூடிய ஒரு சூழ்நிலையிலே, யாழ்ப்பாண நீதிமன்றத்தை தாக்கியது என்பது நீதியை ஒரு அவமதிக்கும் செயலாகவே நாம் இதனைக் கருதுகின்றோம். இதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நீதித்துறையிலே நம்பிக்கையற்ற தன்மையே இந்த ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. இலங்கையின் நீதி நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் மக்கள் எந்தவித ஐயமுமில்லாமல் நீதியை வழங்கக்கூடிய சூழ்நிலையே தற்போது அமைந்துள்ளது. நீதி மன்றத்தை தாக்குவதன் மூலம் நீதி கோருபவர்கள் எதைச் சாதித்தார்களோ எனக்குத் தெரியாது. அவர்கள் நிச்சயமாக நீதித்துறையின் மகத்துவத்தை குறைக்கின்றார்கள் என்று தான் இதைக் கருதுகின்றேன்.
இன்றைய வேலை புறக்கனிப்பில் ஈடுபடுகின்ற எமது யாழ் மாவட்ட சட்டத்தரணிகளுக்கு நாமும் ஆதரவு வழங்குகின்றோம். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முத்த சட்டத்தரணி சிற்றம்பலம் இவ்வாறு கூறுகின்றார்.

SHARE