சட்டவிரோதமாக பணியாற்றிய 74 இந்தியர்கள் கைது

320
மத்துகம பிரதேசத்தில் தங்கி சட்டவிரோதமாக பணியாற்றிக் கொண்டிருந்த 74 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினர் இவர்களை கைது செய்தனர்.

சுற்றுலா வீசாவில் வந்தே இவர்கள் தொழில்களில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றிலேயே இவர்கள் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த 74 பேரும் நாடு கடத்தப்படவுள்ளனர். நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குடிவரவுத் திணைக்கள தகவலின்படி இது வெளிநாட்டவர்களால் மீறப்பட்ட பாரிய வீசா முறைகேடாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE