சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்pனர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்சவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

393

lanka-20150117-3F
இது தொடர்பிலான ஆவணங்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக புலனாய்வுப் பிரிவில் மேர்வின் சில்வா இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

வெள்ளைவான் கலாச்சாரத்திற்கு கோதபாயவே பொறுப்பு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தாம் யாரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை எனவும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தமக்கு எதிராக எவ்வித முறைப்பாடும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெசில் ராஜபக்ஸ மற்றும் கோதபாய ராஜபக்ச ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் மௌனம் காத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் மௌனம் காப்பதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பழி வாங்கும் நோக்கில் இந்த முறைப்பாட்டை செய்யவில்லை எனவும், எனினும் பெசிலும் கோதபாயவும் தம்மை பழி வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லசந்த மற்றும் பாரத படுகொலை தொடர்பிலான ஆவணங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் பற்றிய தகவல்கள் முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

SHARE