கொச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் வீரர் சாமுவேல்ஸ் சதம் அடித்தார். அவர் 116 பந்தில் 126 ரன் எடுத்தார். ஒருநாள் போட்டியில் அவரது 6–வது செஞ்சூரி இதுவாகும்.
இந்த சதத்தை சாமுவேல்ஸ் மறைந்த தனது பயிற்சியாளருக்கு அர்ப்பணித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது சில காயத்தால் நான் ஆபரேசன் செய்து கொண்டேன். இதனால் அதிகமான போட்டிகளில் ஆடவில்லை. கரிபீயன் லீக் போட்டியில் நான் சிறந்த நிலையை பெற்றேன். எனது பயிற்சியாளரை இழந்து விட்டேன். எனவே இந்த சதத்தை நான் அவருக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்றார்.