சத்யா நடிகனாகிவிட்டால், எனக்கும் அவனுக்கும் கூட போட்டி வந்துவிடலாம்-ஆர்யா.

934

புத்தகம் என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் சத்யா. இவர் வேறு யாரும் இல்லை ஆர்யாவின் தம்பி.

சத்யாவிற்கு முதல் படம் வெற்றி தர வில்லை என்றாலும் துவண்டு போகாமல், சுதாரித்துக் கொண்டு இப்போது அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை, காதல் டூ கல்யாணம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அமர காவியம் படத்தை ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா இயக்குகிறார். அமர காவியம் படத்தை ஆர்யா தன்னுடைய தி ஷோ பீப்பிள் பேனரில் தயாரிக்கிறார்.

ஆர்யா இந்த படத்தை தயாரிக்க என்ன காரணம் என்று கேட்ட போது, இயக்குனர் சங்கர் சொன்ன கதை மிகவும் சிறப்பான கதை. அவர்தான் சத்யாவிடம் நடிகனகாக வேண்டும் என்ற ஆசையை விதைத்தவர்.

அதனால் இருவரும் சேர்ந்து நல்ல படத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது,” என்கிறார் ஆர்யா.

மேலும் சத்யா நடிகனாகிவிட்டால், எனக்கும் அவனுக்கும் கூட போட்டி வந்துவிடலாம். அதனால் இப்போது இருக்கும் வீட்டை விட்டு வெளியே போய், அவன் சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிறார்.

பிரச்சனை வேணாம்மா……… உஷாரா இருக்காராம்

 

SHARE