சந்தானம் இயக்கத்தில் நடிக்கப்போகும் நடிகர் யார்?

340

பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். இனிமே இப்படித்தான் படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் சந்தானம், தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.

இதில் நீங்கள் இயக்குனராக எப்போது அவதாரம் எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு ‘கண்டிப்பாக வரும் காலங்களில் படத்தை இயக்குவேன், அதற்காக திரைக்கதையை கூட உருவாக்கிவிட்டேன்.

உதயநிதி, கார்த்தி, விஷால், ஆர்யா போன்ற பல நடிகர்களிடம் கதையை கூறிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கையில் விரைவில் இவர்களில் யாரோ ஒருவர் தான் சந்தானம் படத்திற்கு ஹீரோ போல.

SHARE