சந்திரிகா தலைமையில் தேசியக் நல்லிணக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- ஜோன் கெரி

318

 

புதிய அரசாங்கம் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில், தேசியக் நல்லிணக்க குழுவொன்றை நியமித்துள்ளது.
dcp12358383 ranil-maithri-chanthirika-in-cycle-1

இந்த குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தம்மிடம் தெரிவித்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கடந்த வாரம், ஜோன் கெரியுடன் நடந்த சந்திப்புக் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்விலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான, தேசியக் நல்லிணக்க குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அமெரிக்காவும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்ததாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
SHARE