சந்திரிகா – மைத்திரி இடையில் விரைவில் முக்கிய சந்திப்பு…!

119

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் விரைவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

chandrika-maithri

இந்த சந்திப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதன் பின்னர், இவ்வாரத்துக்குள்ளே இடம்பெறலாம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியுடன் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கிதருமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த தகவல்களை உறுதிப்படுத்தமுடியவில்லை.

வேட்பு மனு விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்த நிலையில் நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த 08ஆம்திகதி புதன்கிழமை இரவு பிரிட்டனுக்கு பயணமானார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான சந்திரிகா, பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் இடம்பெற்ற சில அரசியல் நடவடிக்கைகள் காரணமாக அதிருப்தியடைந்திருந்தார் என்று தகவல்கள் கசிந்திருந்தன.

எனினும், அவர் தனது விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடுதிரும்பினார்.

இந்நிலையில், மாலைதீவின் 50ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தின் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாலைதீவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26)புறப்பட்டு சென்றார்.

இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டுக்கு திரும்பியதன் பின்னரே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் கம்பஹா மாவட்டத்துக்காக தயாரிக்கப்பட்டிருந்த வேட்பு மனுப்பட்டியலை, கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மாற்றி, தனக்கு தேவையானவர்களை இணைந்துகொண்டார் என்றும் அதனாலேயே தான், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு முடிவுசெய்ததாகவும் அமைச்சர் அர்ஜ§ன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE