எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி ரெலிகோம் வீதியில் நிறுவப்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் விஜயம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளிக்கிழமை காத்தான்குடி விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதே வேளை ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பில் நேற்று முன்தினம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு ஜனாதிபதி விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டார்.