ஹன்சிகா சிம்புவுடன் வாலு படமும், ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜுலியட் என்ற படமும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு காரணங்களால் வெளியாகாமல் பிரச்சனையில் இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி, சிம்புவின் வாலு, ஜெயம் ரவியின் ரோமியோ ஜுலியட் என இரண்டு படங்களும் ஜுன் 12ம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.
நண்பர்களான சிம்பு, ஜெயம் ரவி இருவரும் தங்கள் படங்கள் மூலம் மோத இருக்கின்றனர், ஆனால் ஒரே நேரத்தில் ஹன்சிகா நடித்த புதிய படங்கள் வெளியாவதால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்