சனல் 4 ஆவணப்படத்தினால் ஐ.நாவில் சிக்கப்போகும் இலங்கை அரசு

1102

இலங்கை விவகாரம் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி அக்கறை காட்டுவது ஏன் என்று கடந்த வாரம் எமது தினப்புயல் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தது. வியாபார நோக்கம் அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கம் என லாம். காரணம் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து சனல் 4 ஊடகம் இலங்கை விவகாரம் தொடர்பாக அக்கறை காட்டிக்கொண்டிருக்கிறது.

WOMENN-1

கையடக்கத் தொலைபேசிகளுடாக இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்ட புகைப்படங்களையே சனல் 4 ஊடகமா னது இலங்கையரசிற்கெதிரான போர்க்குற்ற ஆவணப்படங்களாக தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும் தம்மிடமுள்ள ஆவணப்படங்களினை வெளியிடுவதற்கு தயாராகவுள்ளது. இத்தொலைக்காட்சியானது புலனாய்வு நடவடிக்கைகளை இலங்கை நாட்டில் முடக்கிவிட்டுள்ளது. அது எவ்வாறெனில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும், ஊடகவியலாளர்களுடாகவும், இலங் கையின் முன்னணி ஊடகங்களில் பணிபுரிபவர்களுடாகவும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இராணு வத் தலைமைக் காரியாலயங்களில் பணிபுரியும் உயரதிகாரிகளினு டாகவும், அவர்களின் வெளிநாடுக ளில் வாழும் உறவினர்களுடாகவும் இரகசியமான ஆவணப்படங்கள் சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்களாக கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆதாரங்கள் மூலமாக பிரச்சினைகளுக்குப் தீர்வு காணு வதை விடுத்து இலங்கை அர சின் ஆதரவாளர்கள் எங்கள் ஊடகப் பணிகளின் மீது தொடர்ச்சியாகப் பகைமையோடு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள் என்று சனல் 4 ஆவணப் படத்தின் தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரின் இறுதிக் கால கட்டத்தில் இடம்பெற்றதான போர்க்குற்றங்கள் தொடர்பான தமது ஆவணப்படங்கள் குறித்து கெலும் மக்ரே எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத் தொகுப்புகள் மிக வெறுப்பூட்டுபவையாக இருக்கின்றன. பெண் போராளிகளின் உடல்கள் தொடர்பாகப் படையினர் நடந்து கொண்டுள்ள முறைகள், ஒரு முறை சார்ந்த மிருகத்தனமான கலாசாரம் மற்றும் பால்நிலை வன்செயல்களை அவை எடுத்துக்காட்டுகின்றன.

z_p08-President6

இந்தப் படங்களைக் கைத் தொலைபேசியில் ஒரு சிப்பாய் எடுத்திருக்கிறார். அதில் சிங்களம் பேசும் படையினர் காணப்படுகிறார்கள். அவர்களின் உடைகள் ஒரு விசேட அணியைச் சேர்ந்தவர்களாகக் காட்டுகின்றன. அவர்கள் சிரிக்கிறார்கள், ஊக்கப்படுத்திக் கொள்கிறார்கள் புலிப் போராளிகளின் சாவுகளை கொண்டாடுகிறார்கள். சடலங்களின் மீது அசிங்கமான பால்நிலை வன் செயல்களை மேற்கொள்கிறார்கள்.

போராளிகள் போன்று தோன்றும் இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதும் எமக்குத் தெரியாது. இந்தப்படங்களை பிரபல்யமான விஞ்ஞான முறையில் ஆய்வுகள் செய்பவரான வைத்தியர் றிச்சார்ட் ய­ப்பர்ட் பரிசோதனை செய்துள்ளார். சடலங்களில் காணப்படும் காயங்கள் உண்மையானவை. இப் படத் தொகுதி போலியானவையல்ல என்று முடிவுக்கு அவர் வந்தது மட்டுமன்றி அந்தக் காயங்கள் போரின் போது ஏற்பட்டவையாக தெரியவில்லை.

இது போரின் பின்னர் அல்லது ஒளித்திருந்து தாக்கிய போது ஏற்பட்டவை போல் காணப்படுவதாக அவர் ஆச்சரியம் தெரிவித்தார்.

இந்த சடலங்களில் குறைந்தது இரண்டின் மீது காணப்பட்ட காயங்களை தலைகளில் ஏற்பட்டிருந்த அழமான காயங்களை அவரால் அடை யாளம் காண முடிந்தது. உயர் வேகத் துப்பாக்கி வேட்டுகளால் இவை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் காயங்களின் ஒழுங்கைப் பார்க்கும்போது இவை கொலை செய்யப்படுவதற்கான வேட்டுகள் என்பதை தம்மால் ஒதுக்க முடியாது என்றும் கூறினார்.

srilnakan-warcrime-2011-1

பிரிட்டிஷ் தமிழ் பேரவையி னால் எமக்கு வழங்கப்பட்ட வீடியோ படங்களும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களுக்கு பணியாற்றுகிறவரான கௌரவமான ஒரு டிஜிட்டல் பட ஆய்வாளரால் சுதந்திரமாக பரிசோதிக்கப்பட்டு உண்மையானவை என்று காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரதியாக விரிவான ஆய்வின் பின்னர் அவர் கூறினார். ‘எதுவித சோடிப்புக ளை யோ, கையாடல்களையோ என்னால் காண முடியவில்லை இந்த வீடியோப் படங்கள் உண்மையானவை என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளன. காட்டப்படும் சம்பவங்களை அவை சரியாக பிரதிபலிப்பவையாக உள்ளன என்று கூறினார்.

இப்படி தொகுப்பில் மிகத் தெளிவாக உள்ளது என்னவென்றால் பால்நிலை கொடுமைகள்தான் பெண்களின் உடல்கள் ஆண்களின் உடல்கள் அல்ல – உடைகள் களை யப் பெற்று மீண்டும் மீண்டும் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளும் மோசமான போர்க்குற்றங்களை சிறுவர்களை போரில் ஈடுபடுத்தியது பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டு வீசியது போன்றவைகளை செய்துதான் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தனது சொந்த செயல்களை நியாயப்படுத்துவதற்கு அரசு இவைகளைப் பயன்படுத்த முடியாது.

புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் இசைப்பிரியா உடைகள் களையப் பெற்று கொல்லப்பட்டதான படங்களை நாம் வெளியிட்ட போது, மோதலின் இடையில் சிக்கி அவர் உயிர் இழந்ததாக அரச தரப்பினர் விடாப்பிடியாக கூறி வந்தார்கள். ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் படைகளினால் உயிருடன் பிடிபட்டிருக்கும் படம் எமக்கு கிடைத்தது. அவர் ஆயுதம் இல்லாமலிருந்தார் உயிருடன் காயமின்றி காணப்பட்டார்.

இசைப்பிரியா மோதலின் போது இடையில் சிக்கி சாகவில்லை. அரச படைகளின் காவலில் இருந்தபோது அவர் இறந்துள்ளார்.

அந்த அடிப்படையில் தான் இப்பொழுது கிடைத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட வேண்டும். ஒரு முறை யான திட்டவட்டமான வகையில் வன்முறைகள் பயன்படுத்தப்பட்டு கொலைகள் நடைபெற்றுள்ளன. இலங்கையில் இருப்பதாகக் கூறப் படுவது போல் ஒழுக்கமும் செயன்முறையும் கொண்ட ஒரு இராணுவத்தில் இந்த மாதிரி செயற்பாடுகளுக்கு கட் டளையி டும் பொறுப்பானது மிக உச்ச நிலை வரைக்கும் தடயங்களை காண முடியும்.

இதன் கருத்து என்னவென்றால் அது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்­ச வரைக்கும் செல்கிறது மற்றும் ஆயுதப் படைகளின் சகல நிலைக் கட்டளைத் தளபதியான அவரது சகோ தரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நோக்கியும் போகின்றது.

இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் வெளியாக்கப்பட்டுள்ள புதிய காணொளி தொடர்பில் தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, அதன் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

சனல் 4 தொலைக்காட்சி, இலங்கை படையினரின் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை உறுதிப்படுத்தும் வகையிலான காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போது, முதலில் அதற்கு பதிலளிக்க மறுக்கப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த காணொளியை தாங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றும், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்ற பொழுது இலங்கையரசினை அசைக்க முடியாத நிலை தோன்றுகிறது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் ஊன்றுசக்தி இருப்பதாக சனல் 4 ஊடகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் ஒரு சில போர்க்குற்றங்களை வைத்தே அமெரிக்க அரசு அந்நாட்டிற்கு படையெடுத்து பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது.

images (2)

ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டும், துண்டங்களாக வெட்டிக் கொல்லப்பட்டும் உள்ளனர். ஆண்பெண் இருபாலாரும் மரம் வெட்டும் வாலால் கூட வெட்டிக்கொலை செய்யப்பட்ட காட்சி களும் இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் அமெரிக்க அரசு திடீரென்று இறங்கி தனது செயற்பாடுகளை செயற்படுத்த தயக்கம் காட்டி வருகின்றது.

ஆனால் உண்மையில் யார் இந்த செயல்களைச் செய்தார்களோ அவர்களுக்கான தண்டனை வழங்கப்படவேண்டும். சனல் 4 வின் ஆவணப்படங்களுக்கு ஐ.நா மன்றம் கூறும் தீர்ப்பு என்னவாக இருக்கப்போகின்றது என்பது இலங்கை அரசிற்கு பெரும் தலையிடியினைக் கொடுக்கப்போகின்றது என்பதுதான் உண்மையான விடயம்.

சுழியோடி

 

SHARE