சனல் 4 இன் ஊடகவியலாளர் கலும்மக்ரே புதிய தகவல்

446

images (2)இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணையாளர்களிடம் தன்னிடமுள்ள வீடீயோ ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சனல் 4 இன் ஊடகவியலாளர் கலும்மக்ரே புதிய தகவல்களையும் தான்சேர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். என்னிடமுள்ள, ஆதாரங்களை ஐ.நா சர்வதேச விசாரணைக்ழுவிடம் வழங்குவதற்க்கு நான் தயாராகவுள்ளேன், இது குறித்து நான் மகிழ்ச்சி கொண்டுள்ளேன், விரைவில் நான் அதனை செய்யவுள்ளேன்,

இது நேர்மையான சர்வதேச விசாரணை , எதிர்காலத்தில் இந்த விசாரணை நீதிநடவடிக்கைகளுக்குவழிவகுக்க கூடும்,
எமது வீடீயயோக்கள் பொய்யானவை, ஆதாரமற்றவை என எம்மை விமர்சனம் செய்யும் இலங்கை அரசாங்கமும், அதன் இராணுவமும் குற்றம்சாட்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நீருபிப்பதற்க்கு எமக்கு புதிய ஆதராங்கள் கிடைத்தன. பாலசந்திரன் பிரபாகரனின் படுகொலை இதற்க்கு நல்ல உதாரணம்.

images (1)ஓவ்வொரு நாளும் இலங்கை மீதான அழுத்தங்கள் இந்த விடயத்தில் அதிகரித்து வருகின்றன, இலங்கையிடம் கேட்கப்படும் கேள்விகள் கடினமானவையாக, விடையளிக்கமுடியாதவையாக மாறி வருகின்றன. சர்வதேவிருதிற்கான நியமனம் இந்த அழுத்தத்தை அதிகரிக்கும் என கருதுகிறோம்,

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இதனை நாங்கள் செய்யவில்லை,யுத்தத்தின் போது இருதரப்பும் இழைத்த மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகள் வெளிவரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.இதுவே சமாதனம், நீதி, நல்லிணக்கம்,நீண்ட கால அநீதிகளுக்கா அரசியல் தீர்வை தேடுதல் போன்ற முயற்சிகளுக்கு அவசியமானது.

யுத்தத்திற்க்கு பின்னர் வடக்குகிழக்கில் உட்கட்டுமான வசதிகளில் பாரிய முதலீடு செய்யப்பட்டுள்ளது.எனினும் இதன் பின்னாலுள்ள நோக்கங்கள் குறித்து கடும் கேள்விகளை கேட்கவேண்டும். புதிய வீதிகளும், புகையிரத பாதைகளும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் தமிழ்மக்களை பொருளாதார ரீதீயாக பலவீனப்படுத்தும் நடவடிக்கைக்கே உதவப்போகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE