சனல் – 4 ஊடகம் ஏன் இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டுகிறது

910

இலங்கையில் நடைபெற்று வந்த யுத்தம் இன்று சர்வதேச அளவில் இடம்பிடிக்கும் அளவிற்கு அதனுடைய செயற்பாடுகளை உலக அரங்கிற்கு எடுத்துரைத்தது ஊடகங்களே. அந்தவகையில் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சனல் 4 ஊடகமானது இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்கத்தொடங்கியது. இராணுவ புலனாய்வினரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணப் படங்களே இன்று உலகவளம் வருகின்றது. அதனடிப்படையில் ஜெனிவாவில் நடைபெற்ற அமர்வுகளில் எல்லாம் இலங்கை தொடர்பான ஒளிநாடாக்கள் மட்டுமல்லாது சர்வதேச ஊடகங்களில் கூட புலித்தேவன், ரமேஸ், இசைப்பிரியா உள்ளிட்ட பல போராளிகளின் அரைநிர்வாண சித்திரவதைக்காட்சிகளும் கொடூரமாக அடித்துக் கொலைசெய்யப்பட்ட காட்சிகளும் இதில் அடங்குகின்றன.

இதனை அடிப்படையாக வைத்தே உலக நாட்டு அரசியல்கள் இலங்கை மீது கவனத்தை செலுத்தியுள்ளன. இலங்கை மீது சனல் 4 தொலைக்காட்சி தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுகின்றதா அல்லது இராஜதந்திர ரீதி யிலான உறவை மேம்படுத்துவதற்காக செயற்படுகிறதா? அல்லது தனது ஊடக புலனாய்வை நாட்டிற்குள் கட்டவிழ்த்துள்ளதா? என்றெல்லாம் பலவாறு கேள்விகள் எழுப்பப்படும் நிலை யில் சனல் 4 ஊடகம் செயற்பட்டு வருகிறது அதுமட்டுமல்லாமல் சனல் 4 என்பதன் அர்த்தம் நான்கு கண்டங்களை இணைத்து செயற்படும் ஊடகம் என்பதாகும்.

ஊடகங்களில் அதிகமானவை தமது வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே விறுவிறுப்பான செய்திகள், புலனாய்வுச்செய்திகள், ஆய்வுச்செய்திகளை வெளியி டுவது வழக்கம். அதனடிப்படையில் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற காட்சிகளை காணொ ளிகளாக வெளியிட்டமையானது வியாபாரநோக்கத்திலேயா அல் லது மனிதாபிமான முறையா என்று பார்க்கும் நோக்கத்தில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஒன்றன் பின் ஒன்றாக தமிழ்மக்கள் மீது செய்யப்பட்ட அநீதிகளை கூறிவந்தபோதிலும் அதற்கான முடிவுகளை இலங்கை அரசோ உலக நாடுகளோ எடுத்ததாக இல்லை.

சனல் 4 ஊடகம் தொடர்பில் பேசுபவர்களையோ அதற்கு தகவல் வழங்குபவர்களையோ உடன் கைதுசெய்வது மற்றும் தலைமறைவாக்கும் நடவடிக்கையாகவே அமைகி றது. இருந்தபோதிலும் யுத்தத்தின் போது ஊடகங்களுக்கான அடக்குமுறை செய்தித் தணிக்கை என்பன இருந்துவந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 2008,2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வடபகு தியில் பணிபுரிந்து வந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டதன் அடுத்த கட்டமாகவே தமிழ்மக்களுக்கான ஆக்கிரமிப்புக்கள் கட்டவீழ்த்துவிடப்பட்டன. மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் எங்கும் விமானக் குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டன. இக்காலகட்டத்தின் போது செஞ்சோலை படுகொலை உட்பட கிளிநொச்சி வைத்தியசாலை தாக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளடக்கப்படுகின்றன.

இதில் பல நூறு மக்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான சம்பங்களை எல்லாம் மிகத்துல்லியமான முறையில் பதிவு செய்து கொண்டது சனல் 4 ஊடகம். ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுக ளில் சனல் 4 ஊடகம் விற்பனை ரீதி யாக தனது ஊடகத்திறமையினை வெளிப்படுத்தி வந்தது. அமெரிக்கா ஈராக் மீது தாக்குதல் நடத்திய போது அல்-ஜசீரா தொலைக்hகட்சி எவ்வாறு பிரசித்தி பெற்றதோ அதேபோன்று இலங்கை விவகாரத்தில் சனல் 4 தொலைக்காட்சியும் பிரசித்தி பெற்றது. மாதம் ஒன்றிற்கு இலங்கை ரூபா விகி தம் 50 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஒரு ஊடக நிறுவனம் தான் இந்த சனல் 4 ஆகும்.

உண்மையான செய்திகளை உடனுக்குடன் வழங்குவதிலும் திறமை வாய்ந்ததொரு ஊடகமாக செயற்பட்டு வந்தது. இலங்கை விவகாரத்தில் பல்வேறு தரப்பட்ட சந்தர்ப்பங்களில் தமது ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட போதிலும் இன்னமும் தமிழ்மக்களுக்கான எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்படாத நிலையே காணப்படுகிறது. இதற்கான காரணங்களைப் பார்க்கின்றபொழுது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவரோடு இருக்கின்ற பல அரசியல் இராஜதந்திரிகள் சட்ட ரீதியாக எவற்றை உலக நாடுகளுடன் அல்லது ஜெனிவாவுடன் அனுகமுடியுமோ அவற்றையே இதுவரை காலமும் அனுகிவந்துள்ளனர்.

இதனூடாக தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக ஆதரவாக செயற்படும் கட்சிகள் கூறிவருகின்றபோதிலும் அவற்றை சரியாக நடைமுறைப்படுத்த பலனில்லாதவர்கள் போல் இருந்துவருகின்றனர். கடந்த வருடம் சனல் 4 ஊடகவியலாளர் கெலம் மக்கரே துணிச்சல் மிக்க ஊடகவியலாளராக இலங்கை வந்துசென்றார். பல்வேறு எதிர்ப்புக்கள் மத்தியிலும் அவரை தரக்குறைவாக கெட்டவார்த்தைகளால் பேசியபோதிலும் ”வுhயமெலழர எநசல அரஉh’ என்று தன்னை பேசி யவரிடம் கூறிச்சென்றதை காணக்கூடியதாகவிருந்தது.

சனல் 4 ஊடகத்தின் பின்னணியில் அமெரிக்க அரசின் செயற்பாடுகள்.

உலக வல்லரசாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள அமெரிக்கா சனல் 4 ஊடகத்தின் பின்னணியில் இருப்பதாக பல ஆய்வாளர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர். ஏனெ னில் சனல் 4 ஊடகமானது யுத்தம் நடைபெறுகின்ற பகுதிகளுக்குச் செல்வதாயின் அதற்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளது. இலங்கை வந்த சனல் 4 ஊடகவியலாளர்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமாகவிருந்தால் இலங்கை யரசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து ருNP அரசாங்கத்தை நிறுவி அத னோடு தனது ஆட்சி முறைமைகளை நடத்துவதற்கான சந்தர்ப்பங்களும் இருந்துவந்தன. இவ்வாறிருக்கின்ற காலப்பகுதிகளில் அமெரிக்கா மறை முகமாக இலங்கை மீது தனது ஆதிக்கத்தை செலுத்திவருகின்றது.

அமெரிக்க அரசு இலங்கையில் தனது பாதுகாப்பு எல்லைகளை பலப்படுத்தும் வகையிலும் உலகப் போர் இடம்பெற்றால் இலங்கையை தனது பாதுகாப்புத் தளமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என எண்ணிவருகின்றது. அதற்கு முர ணான செயற்பாடுகளில் இலங்கையரசு செயற்படுமாகவிருந்தால் சனல் 4 ஊடகத்தை தனது கைப்பொம்மையாக வைத்துக்கொண்டு தற்போது காண்பிக்கப்பட்டதைவிட மிகவும் மோசமான ஆவணப்படங்ளை வெளி யிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவ் சனல் 4 ஊடகத்தில் அமெரிக்காவில் இருந்து செயற்படக்கூடிய இராணுவ உளவா ளிகளும், பிரித்தானிய இராணுவ உளவாளிகளும் அங்கத்துவம் வகிக்கின்றனர். இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கே இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கிக்கூறமுடியாத நிலையில் சனல் 4 ஊடகம் மிகத்துல்லியமாக எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக கூறிவரும் அதேநேரத்தில் எங்கெங்கெல்லாம் இலங்கையரசு தனது செல்வாக்கை நாடுகளில் பயன்படுத்துகின்றதோ அங்கெல்லாம் இலங்கையரசை அவமானப்படுத்தும் நோக்கிலேயே இவ்தொலைக்காட்சி செயற்பட்டுவருகின்றது எனலாம்.

ஊடகத்தினூடாக புலனாய்வு.

வியாபார ரீதியிலான நோக்கம் சனல் 4 விற்கு இருந்தாலும் கூட இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டுவது போல் தனது புலனாய்வு விடயத்தில் அக்கறை கொண்டுள்ளது. நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அளவிற்கு ஊடகங்கள் செயற்படக்கூடாது. மனி தாபிமான முறையில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டுவதற்கு ஊடகங்களுக்கு உரிமை இருக்கின்றது. அவ்வாறு இலங்கையில் உள்ள ஊடகங்கள் சுட்டிக்காட்டிவரும் வேளை யில் அவர்களும் ஏதோ ஒரு வகை யில் காணாமற்போனோர் பட்டியிலில் இணைக்கப்படும் துர்ப்பாக்கியநிலையே நிலவுகின்றது. இன்று சனல் 4 தொலைக்காட்சி தமிழ்மக்களின் பிரச்சினைகளை உலக நாடுகள் பலவற்றிற்கு எடுத்துரைத்ததன் விளைவாக தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்ற ஒளிச்சமிக்ஞைகள் தென்படுகின்றன.

ஆனால் பிரபாகரன் கூறியது போல் எந்த அரசாங்கமும் தமி ழீழ விடுதலைப்புலிகள் மீது அக்கறை காட்டுவார்கள் ஆனா லும் கடைசிநேரத்தில் எம்மை கலுத்தறுப்பதே அவர்களின் நோக்கம் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

மின்னல் தொலைக்காட்சியில் உலக நாட்டு அரசியல் வாதிகள், உள்ளுர் அரசியல் வாதிகளை நேர்காணல் நடத்தப்பட்டபோதிலும் பிரபாகரனை நேர்காணல் காண எடுத்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிவடைந்தன. இவ்வாறிருந்தபோதிலும் இறுதி நேரத்தில் பிரபாகரன் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை அன்ரன் பாலசிங்கம் இருந்தகாலப்பகுதியில் நடத்தினார். இதன் காரணமாக உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் பிரபாகரனுடன் சமாதான பேச்சுவார்ததைகள் தொடர்பாக விரிவானதொரு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

இக்காலகட்டத்தில்தான் விடுதலைப் புலிகளுடனான ஐக்கியத்தை உலக நாட்டு ஊடகவியலாளர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். உலக நாட்டில் பணிபுரி யும் ஊடகவியலாளர்கள் உளவாளிகள் என்று தெரிந்தும் வன்னிப்பிரதேசத்திற்கு ஊடகவியலாளர்கள் சந்திப்பை மேற்கொள்ள விட்டது என்பது பிரபா கரனின் அரசியல் நடவடிக்கை போராட்டத்தினை நிலைகுலையச் செய்யும் ஒரு நிகழ்வாகவே அது அமையப்பெற்றது.

ஒரு ஊடகவியலாளரினால் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றியமைக்கமுடியும் பல நாடுகளில் நடைபெற்ற இராஜதந்திர சந்திப்புக்கள் பல நாடுகளின் பின்னடைவுகளுக்கு காரணமாக அமைந்தன.

அதேபோன்று இலங்கையரசை நிலைகுலைப்பதற்கு தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும் சனல் 4 ஊடகமானது மும்முரமாக செயற்பட்டுவருகின்றது. வெளிப் படையாக மனித நேய அடிப்படையில் செயற்படுகின்றதா அல்லது தனது வியாபார நோக்கில் செயற்படுகின்றதா அல்லது ஊடக புலனாய்வை மேற்கொள்கின்றதா அல்லது அரசியல் நோக்கத்திற்காக செயற்படுகின்றதா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இருப்பினும் இத னோடு தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு வந்தால் எல்லாம் சுகமே.

– மறவன் –

SHARE