சமந்தாவை சீண்டிய தமன்னா 

393அனுஷ்கா படத்தில் நடிக்க சூர்யா-சமந்தாவுக்கு இயக்குனர் ராஜமவுலி வாய்ப்பு தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.அனுஷ்கா தமிழ், தெலுங்கில் நடிக்கும் படம் பாஹுபாலி (தமிழில் மஹாபலி). இப்படத்தை ராஜமவுலி டைரக்ஷன் செய்கிறார். பல கோடி செலவில் உருவாகும் இப்படத்தில் தமன்னாவும் நடிக்கிறார். தவிர முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்.  ஏற்கனவே இப்படத்தில் சமந்தாவை நடிக்க ராஜமவுலி கால்ஷீட் கேட்டிருந்தார்.

மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார். அவருக்கு பதிலாக தமன்னா ஒப்பந்தம் ஆனார். சமந்தாவின் கைவிரிப்பை குத்திக்காட்டும் வகையில் தமன்னா தற்போது கருத்து தெரிவித்திருக்கிறார். ராஜமவுலியின் படத்தை யாராக இருந்தாலும் மறுத்திருக்கக்கூடாது. இதுவொரு நல்ல வாய்ப்பு. அதை பயன்படுத்திக்கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி என்று தமன்னா குறிப்பிட்டிருந்தார்.

இவரது பேச்சு சமந்தா ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சைகளிலிருந்து விடுபடும் வகையில் சமந்தாவை பாஹுபாலி படத்தில் கெஸ்ட் ரோலில் ராஜமவுலி நடிக்க வைக்க முயல்வார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் பாஹுபாலி படத்தில் தனக்கும் ஒரு சிறிய வேடம் தர வேண்டும் என்று சூர்யாவும் கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கும் இயக்குனர் வாய்ப்பு தருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது

 

SHARE