ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்ற ‘ஏடித நாகேஸ்வரராவ் நினைவு விருது’ விழாவில் அமிதாப் பச்சனுக்கு விருது தந்து கௌரவித்தனர். தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டாலும், சமந்தா தான் மொத்தமாக ஸ்கோர் செய்துவிட்டார். சினிமாவிலேயே கவர்ச்சி காட்ட தயங்கும் சமந்தா முழு முதுகு காட்டிய கவர்ச்சி நிலவாக விழாவுக்கு வந்தார்
. அஞ்சான் திரைப்படத்தில் ஸ்விம்மிங் டிரஸ். ஒரு பட்டனே போட்ட சட்டை என சமந்தா நடித்தபோது அவரது ரசிகர்களே ‘உங்களுக்கு கவர்ச்சி செட்டாகவில்லை’ எனக் கூறியிருந்தனர். அஞ்சானில் ரசிகர்களுக்கு ஓவர்டோஸ் ஆகிவிட்டது அறிந்ததாலோ என்னவோ இந்த நிகழ்ச்சிக்கு முழு முதுகு ’மட்டும்’ தெரியும்படி வந்திருந்தார் சமந்தா. ஆந்திரவில் நடிகைகளுக்குள் போட்டி வலுத்துவிட்டதாலும், அதிலும் முக்கியமாக சமந்தா, ஸ்ருதிஹாசனின் போட்டியை சமாளிக்கத்தான் இப்படி கவர்ச்சிக் கோலம் பூண்டிருக்கிறார் என கோரஸாக சொல்கிறது ஆந்திராவும் தெலுங்கானாவும். த்ரிஷாவால் புறக்கணிக்கப்பட்ட ராணா இவ்விழாவில் சமந்தாமீது வைத்த கண் வாங்காமல் சுற்றி வந்ததும் எல்லா கேமரா கண்களிலும் பதிவாகியுள்ளது. வருண் மணியனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துவிட்ட த்ரிஷாவின் முன்னாள் காதலர் ராணா சமீபத்தில் ‘சமந்தாவுடன் டேட்டிங் போக ஆசை’ என்று பகிரங்கமாக பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.