சமந்தா குதிரையேற்றம் பழகுகிரார்

276
கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னனி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் சமந்தாவிற்கு இயக்குநர் ராஜமௌலி இயக்கிவரும் பாகுபலி படத்தில் தற்போது தமன்னா நடித்து வரும் கேரக்டருக்கான வாய்ப்பு முதலில் சமந்தாவிற்குதான் கிடைத்ததாம். ஆனால் சமந்தாவிற்கு குதிரையேற்றம் தெரியாது என்பதால் குதிரையேற்றம் தெரிந்த தமன்னாவிற்கு அந்த வாய்ப்பு சென்று விட்டதாம். இந்நிலையில் தற்போது த்ரிஷாவுடம், சமந்தா இணைந்து நடிக்கவுள்ள கோடி படத்திலும் குதிரையேற்றம் உள்ளிட்ட வீரதீர சாகச காட்சிகள் உள்ளதால் பாகுபலி படத்தின் வாய்ப்பு பறிபோனது போல் மீண்டும் வாய்ப்பினை தவறவிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்த சமந்தா தீவிர குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
SHARE