சமய முரண்பாடுகளை ஆராயும் பொலிஸ் பிரிவு ஆரம்பம்:

525

சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்கான விசேட பொலிஸ் பிரிவு கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, தர்மபால மாவத்தை இலக்கம் 135இல் அமைந்துள்ள பௌத்த மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் 5ஆவது மாடியில் இந்த விசேட பொலிஸ் குழு செயற்பட தொடங்கியுள்ளது.

சமய முரண்பாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கின்ற பொலிஸ் நிலையங்களில் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் திருப்தி கொள்ளாவிடின் இந்த பிரிவில் முறையிடலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 0112307674 அல்லது 0112307964 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டோ, அல்லது 0112307688, 0112307406 ஆகிய தொலைநகல் இலக்கங்களுகோ அறிவிக்க முடியும் எனவும், இந்தப் புதிய பொலிஸ் பிரிவில், உதவி; பொலிஸ அதிகாரியின் கீழ் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள்கள் அறுவர் கடமையாற்றுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத விவகாரங்களை ஆராயும் விசேட பொலிஸ் குழு நாளை முதல் செயற்படும்:-

இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு நாளை முதல் செயற்படவுள்ளது.

மத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்பட வேண்டும் என கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.

இதன்படி அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழு நாளை திங்கள் முதல் செயற்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

SHARE