சமீபத்தில் லிபியா தேசத்தின் கடற்கரை பகுதியில் அழைத்து வரப்பட்ட 21 கிறிஸ்தவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற மிருக பயங்கரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த காணொளி காட்சி இந்த வலைப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.. இருதயம் பலகீனமானவர்கள் யாரும் பாக்க வேண்டாம்.

455

 

மரண பயம் அறியா கிறிஸ்தவ கோதுமை மணிகள் – “என் இயேசுவே” என்று பாடி கொண்டே உயிரை விட்ட மாவீர்கள்.

இந்த உலகின் இறுதி நாட்களுக்கு அழைத்து செல்லும் முக்கியமான நிகழ்வுகள். ஆதாரம்: பிபிசி தொலைகாட்சி மற்றும் Fox தொலைகாட்சி மற்றும் அல்-ஜசீரா தொலைகாட்சி நிறுவனங்கள்

 

சமீபத்தில் லிபியா தேசத்தின் கடற்கரை பகுதியில் அழைத்து வரப்பட்ட 21 கிறிஸ்தவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற மிருக பயங்கரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த காணொளி காட்சி இந்த வலைப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.. இருதயம் பலகீனமானவர்கள் யாரும் பாக்க வேண்டாம்.

http://shoebat.com/…/watch-video-isis-savages-beheading-tw…/

ஆரஞ்சு நிற உடையில் அழைத்து வரப்படும் 21 எகிப்திய கிறிஸ்தவர்கள் வரிசையாக மூலங்கள் இடப்படுகின்றனர். பின் கழுத்தி கத்தி வைக்கப்படுகிறது….. அதில் தலைவனை போன்று காட்சி அளிக்கும் ஒருவன் ஆங்கிலத்தில் உரையாடுகிறான்.

அதில் இருந்து ஒரு சில மொழி பெயர்ப்புகள்
“எல்லா வல்ல இறைவன் அல்லாஹ் கத்தியின் (sword) மூலமாக இந்த உலகத்திற்கு அமைதியை கொடுக்க விரும்புகிறார். லிபியா நிலத்தில் இருந்து உலகத்தில் உள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கும் எச்சரிக்கை இது… நீங்கள் எல்லாரும் உங்களை பாதிகாத்து கொள்ளுங்கள். நாங்கள் உங்கள் மீது போர் தொடுத்திருக்கிறோம். சிலுவையில் அறியப்பட இருந்த ஈசா (இயேசு) இவர்களை கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அல்லாவின் மீது ஆணையாக உங்கள் ரத்த இந்த மண்ணோடு கலக்கும்.”

ஆதாரம்: http://shoebat.com/…/watch-video-isis-savages-beheading-tw…/

என்ற கூக்குரலோடு நிறைவு பெரும் இந்த காணொளி பிறகு 21 பேரின் முகங்களையும் காட்டுகிறது. இதில் சிலர் வாயசைத்து பாட்டு பாடுவதை நீங்களும் காணலாம். கழுத்தை கத்தி அறுக்கும் போதும் கடைசியாக கூறின வார்த்தை “என் இயேசுவே” “Ya Rabbi Yasou’” (O My Lord Jesus).

இதை பார்க்கும் பொது என் உள்ளம் கண்ணீராலும் இருதயம் நொறுங்கி இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்படுகிறது. இந்த நிகழ்வை கண்ட எகிப்து தேசம் கலங்கி போய் உள்ளது. இவர்களின் பெற்றோர் உடன் பிறந்தோர் அழும் காட்சியை கண் கொண்டு காண முடியவில்லை. அவர்கள் கூறும் சாட்சி “இயேசுவின் நாமத்தின் அவருடைய விசுவாசிகள் கொல்லப்படுவார்கள் என்பது நிறைவேறுவதை காண்கிறோம்” என்று கூறுகின்றனர்.

வெளிப்படுத்தல் 6:8 நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக தன்னுடைய போரை திருப்பி விட்டிருக்கும் இஸ்லாமிய நாடு என்ற கொலைகார கூட்டமைப்பு இப்போது அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதில் ஓர் பங்கு தான் இந்த காணொளி. இந்த போர் உலகமெங்கும் பரவ isis தீவிரவாத இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவின் பெங்களூரு, ஆஸ்திரேலியாவில், பிரான்சில் நடந்த படுகொலைகள் இதற்க்கு முன் உதாரணம். வேகமாக paravi வரும் இந்த கேவலமான கலாசாரம் இயேசுவின் வருகைக்கு முன் நடக்க இருப்பதை வேதாகமம் அன்றே கோடிட்டு காண்பித்தது…

ஒன்றை மாத்திரம் நினைவில் வைப்போம். மனிதனின் உயிரை பறிப்பதற்கு மனிதருக்கு அதிகாரம் இல்லை. இதை கலாத்தியர் 5:21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

I யோவான் 3:15 மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

வேத வசனங்கள் நிறைவேறி கொண்டிருப்பது உண்மை என்று நம்பும் இந்த உலகம் இந்த வசனத்தை இப்போது நம்ப ஆரம்பித்திருக்கிறது. வெளி 19:11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

நிச்சயம் இயேசு கிறிஸ்து வருவார். நாமும் ஆயத்தமாவோம். வெளிப்படுத்தல் 6:16. பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; 17. அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்

காலங்கள் அவரின் வருகைக்கு ஆயத்தமாய் இருக்கிறது. யார் நிலை நிற்க கூடும்? சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் ஆளாகாதீர்கள். அவரை சந்திக்க நீங்கள் ஆயத்தமா?

SHARE