சரியான விலையில் தரமான OnePlus 12R Smartphone: சிறப்பம்சங்கள், விலை, வங்கி சலுகைகள் விவரம்

23

 

ஒன்பிளஸ் நிறுவனம் தங்களுடைய OnePlus 12R பிரீமியம் ஸ்மார்ட்போனின் விற்பனையை இன்று முதல் இந்தியாவில் தொடங்குகிறது.

சிறப்பம்சங்கள்
ப்ரீமியம் நடுத்தர ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ள OnePlus 12R அசத்தலான 6.78-inch AMOLED ProXDR டிஸ்பிளே-வை கொண்டுள்ளது.

சிறந்த கிராபிக்ஸ் செயல்பாட்டிற்காக Qualcomm Snapdragon 8 Gen உடன் இணைக்கப்பட்ட Adreno 740 GPU என்ற 2 சிப்செட்கள் மூலம் ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

OnePlus 12R ஸ்மார்ட்போன் 16GB RAM மற்றும் UFS 4.0வின் 256GB storage அம்சத்துடன் வெளிவந்துள்ளது.

5,500mAh என்ற மிகப்பெரிய பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனுக்கு ஏதுவாக மற்றும் விரைவான மின் ஊட்டத்திற்காக அதிவேக 100W SUPERVOOC சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை 50 MP Sony IMX890 பிரைமரி சென்சார் உடன் OIS மற்றும் EIS தொழில்நுட்பமும் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 8MP ultra wide மற்றும் 2MP macro lens கேமராவுடன், 16MP முன்பக்க கேமரா அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட இந்த கேமரா அம்சத்தின் உதவியுடன் Movie Mode, Interval Shooting, Slo-mo, Time-lapse, Ultra Steady Mode ஆகியவற்றை பதிவு செய்யலாம்.

விலை மற்றும் வங்கி சலுகைகள்
8GB RAM மற்றும் 128GB storage மாடல் ரூ. 39,999க்கும், 16GB RAM மற்றும் 256GB storage மாடல் ரூ.45,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கூல் ப்ளூ மற்றும் அயர்ன் கிரே ஆகிய இரண்டு நிறங்களில் OnePlus 12R வெளிவந்துள்ளது.

அமேசான் மற்றும் ஒன்பிளஸின் சொந்த தளத்தில் OnePlus 12R ஸ்மார்ட்போனை வாங்கும் போது ICICI வங்கியின் கிரெட் கார்டு பயன்படுத்தினால் ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

SHARE