சர்ச்சையில் சிக்கிய ஸ்கொட்லாந்து வீரர் 

409
ஸ்கொட்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ‘மஜிட் ஹக்’ அணியின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டமையால் உலகக் கிண்ண அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை ஸ்கொட்லாந்துக்கு திருப்பியனுப்பியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம்.
ஸ்கொட்லாந்து அணிக்காக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள வீரர் ‘மஜிட் ஹக்’ . எனினும் உலகக் கிண்ணத் தொடரில் அவர் சிறப்பாக பிரகாசிக்காத நிலையில் இலங்கை அணிக்கெதிராக இறுதியாக நடைபெற்ற போட்டிக்கான அணியிலிருந்து  மஜிட் நீக்கப்பட்டிருந்தார்.
இம் முடிவால் அதிருப்தியடைந்த மஜிட் ஹக் பின்வருமாறு டிவிட் செய்திருந்தார் : ‘Always tougher when you’re in the minority! #colour #race’.

சிறுபான்மையாக இருக்கின்றபோது எப்போதும் கடினமானதே என்ற அவரது டுவிட்டானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவர் குறிப்பிட்ட டிவிட்டை தனது கணக்கிலிருந்து பின்னர் அழித்துள்ளார். ஆனால் அவரது கருத்தானது இனவாத த்தை தூண்டுவது போல அமைந்துள்ளதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து மஜிட் ஸ்கொட்லாந்துக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார். அவர் மீது விரைவில் நடவடிக்கையெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

SHARE