சர்வதேச ஜிம்னாஸ்டிக்: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்

670

சர்வதேச காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனர்.

இப்போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில், ஆஷிஸ் குமார் 2 தங்கப் பதக்கங்களை வென்றார். மகளிர் பிரிவில் தீபா ஒரு தங்கப் பதக்கம் வென்றார்.

தங்கப் பதக்கத்தைத் தவிர ஆஷிஸ் குமார் மேலும் 2 வெள்ளிப் பதக்கங்களை தனது கணக்கில் இணைத்தார். அதேபோல், மகளிர் பிரிவில் தீபா வெள்ளிப் பதக்கம் ஒன்றையும் வென்றார்.

ஆடவர் அணிப் பிரிவிலான போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்த அணியில் ஆஷிஸ் குமார், ராகேஷ் பத்ரா, அபிஜித் ஷிண்டே, சஞ்சய் பர்மன் மற்றும் சந்தன் பதக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

SHARE