சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்புக்களும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கப்படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மனிதாபிமானத்திற்கு எதிரான வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கலப்பின வகை நீதிமன்றமொன்றை உருவாக்கி அதன் ஊடாக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியிலான நீதவான்கள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களின் பங்களிப்புடன் இந்த பொறிமுறைமை முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீதிக்கு புறம்பான வகையிலான எறிகணைத் தாக்குதல், சட்டவிரோத படுகொலைகள், பலவந்த காணாமல் போதல்கள், பாரியளவிலான சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், சிறுவர் போராளிகளை படையில் இணைத்தல் உள்ளிட்ட பாரியளவிலான குற்றச் செயல்களில் இரண்டு தரப்பும் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலில் புதிய மாற்றமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அறிக்கை வெளியிடப்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைமை வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், இலங்கையின் நீதிக் கட்டமைப்பு குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தக்கூடிய இயலுமையை கொண்டதில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் திட்டமொன்று அமுல்படுத்தாமையே மிகப் பெரிய பலவீனமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமானவை: ஐ.நா
தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் –
சில தருணங்களில் மிக மோசமானதாக – மேற்கொள்ளப்பட்டன என ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது –