சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை

483

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து கொண்டு அரசாங்கம் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளை பாரியளவில் வரையறுத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் சில நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை என்றால் ஏன் அரசாங்கம் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கப் பாடசாலைகளுக்கு போதியளவு நிதி வழங்கப்படாத காரணத்தினால் மாணவர்களிடம் அதிபர்கள் பணம் திரட்டி நிர்வாகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில பாடசாலைகளில் அதிபர்களை விடவும் பழைய மாணவர் ஒன்றியங்களின் கரம் ஓங்கியிருப்பதாகவும், அதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாமையே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பொதுமக்களை முட்டாள்களாக நடாத்துவதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

SHARE