சர்வதேச போட்டியில் களமிறங்க தயாராகும் மலிங்கா

642

ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மும்பை அணிக்காக விளையாடுகிறார்.ஐ.பி.எல் போட்டிகளில் நடப்பு சாம்பியனான மும்பை அணி இந்த ஐ.பி.எல் தொடரில் தொடர் தோல்விகளை மட்டுமே தழுவி வருகிறது. இதுவரை மும்பை அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான நிலையில் உள்ளது.

மேலும் நேற்று கொல்கத்தாவுடன் மோதிய போட்டியிலும் தோல்வி கண்டதால் மும்பை அணியின் பிளே–ஆப் சுற்று கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.

அதனால் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இலங்கை அணியின் வீரரான மலிங்கா இந்த ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்க்காக இங்கிலாந்துக்கு புறப்படுகிறார்.

SHARE