சவால்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்: ஜார்ஜ் பெய்லி..

352
 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சவால்களை சந்திக்க தயாராக இருக்கிறோம் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் லீக் போட்டியில் இன்று பஞ்சாப்- ராஜஸ்தான் அணிகள் களம் இறங்கவுள்ளன.

புனேயில் நடைபெற உள்ள இந்த போட்டி குறித்து பஞ்சாப் அணியின் தலைவர் பெய்லி கருத்து வெளியிட்டுள்ளார்.

எங்களது அணியின் பெரும்பாலான வீரர்கள் இந்த சீசனுக்கு விரைவில் தயாராகியுள்ளனர். ஒட்டுமொத்த வீரர்களும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

எனவே, இந்த புதிய சீசன் சவால்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடினோம். ஆனால், இந்த வருடம் மீண்டும் ஒன்று திரண்டு முன்னோக்கி சென்று சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான நேரம் இதுவாகும்.

ராஜஸ்தான் அணியில் சுமித் மற்றும் பால்க்னர் போன்ற வீரர்கள் உள்ளனர். எங்கள் அணியிலும் ஏராளமான அவுஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது.

ஆகவே, அவர்களின் குறைகளைக் கண்டு அதற்கேற்ப செயல்பட்டு அவர்கள் ஆட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

SHARE