சவுதியில் இஸ்லாமை இழிவுபடுத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 1000 சவுக்கடிகள் கொடுக்கப்பட உள்ளது.சவுதியில் வாழ்ந்து வரும் ரைப் படாவி(Raif Badawi) என்ற இளைஞர் இணையத்தில் இஸ்லாம் தொடர்பான தவறான கருத்துக்களை பதிவு செய்ததாக கடந்த 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 கசையடிகளும் தண்டனையாக விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது சவுக்கடி தண்டனை இன்று மதியம் ஜெட்டா(Jeddah) மசூதிக்கு வெளியே நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சவுக்கடி நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினர் பங்கேற்க வேண்டும் என ரைப் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரே நாளில் ரைப்பிற்கு 1000 கசையடிகள் தரப்படாது என்றும், நாளை 50 சவுக்கடிகளும், அதனைத் தொடர்ந்து வரும் 50 வாரங்களில் மீதி சவுக்கடிகளை பிரித்து நிறைவேற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. |